சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

காதலர் தின கவிதைகள்




எனக்கு இருப்பதெல்லாம்

ஒரே ஒரு ஆசைதான்.
அடுத்த பிறவியில்

நீ நானாக வேண்டும்

நிறைய பழி வாங்க வேண்டியிருக்கிறது
நானாகும் உன்னை



அன்று செவ்வாய் கிழமை
விடாமல் பெய்தது

முன்னிரவு ஆரம்பித்த மழை
அக்டோபர் இரண்டை நினைவுறுத்தி

காலையிலிருந்து காந்திப்பாட்டு

இன்னொரு ஏவுகணையை

ஏவியிருந்தது
வெற்றிகரமாக இந்தியா.
உனக்குப் பிடித்த மூன்றாம்பிறை
தொலைக்காட்சியின் மாலையில்
இத்தனை நிகழ்வுகளோடுதான்
பிரிந்து போயிருந்தாய்
வெகு சாதாரணமாக

Labels: ,

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

அனானி ஆப்சனை தூக்கு.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வெய்யில்

Arththamulla snekithamahathaan padukirathu. kopperunjolanum pisiraanthaiyaarum ngapagathil varugiraarhal. vaalthukkal thozhargale....

niraiya anbudan
...veyyil...

 

Post a Comment

<< முகப்பு