சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

உயிர் உறவு



உயிர் உறவு


மின்னல் தொடுகையின்
பின்ன நொடியில்
எங்கோ நிகழும் அது.

உயிர் அறுந்து
உலகம் பூஜ்யமாக
நெற்றியின் ஓரத்தில்
சிகப்பாய் எரிமலை நிலவு.

காற்றுத் தேவையில்லாத
கடைசி வினாடியில்
பிரபஞ்சம் புத்துயிர் பெறும்.
ஜீவன் சிலிர்த்து அடங்கும்.

வேர்வைக் கிணறுகள் ஊறி
தாகம் தணிக்கும் முயற்சியில்
இரு நதிகள் நனையும்.

கண்ணுக்குத் தெரியாத
கர்ப்பச்சுவர் நோக்கி
உந்திச் செல்லும்
விந்துத் துளி..

நடக்கும் அற்புதம் தெரியாமல்
நெகிழ்ந்து கிடப்போம் நாம்.

Labels: ,

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு