சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

பூ






என் வீட்டுத் தோட்டத்தில்
ஏகப்பட்ட பூச்செடிகள்
பூக்கும், சிரிக்கும்
பின்பொருநாள் மரிக்கின்ற
பூக்களுக்கு மத்தியில்தான்
புஷ்பவதியானதெல்லாம்..

பதினேழு வயதில்
பெண்பார்த்து போனதை
பூக்களிடம் சொல்லி அழுதிருக்கிறேன்..
படித்த மாப்பிள்ளை
பட்டணத்து வாழ்க்கை என்றார்கள்.

நந்தவனம் உதறி
நகரம் வந்து சேர்ந்தேன்.
புன்னகை தொலைத்து,
ஃப்ளாட்களின் மத்தியிலே
இயங்கும் மனிதர்களித்தில்
பூக்களுக்கு ஏது முன்னுரிமை?..

இப்போதெல்லாம்
பூக்களைப் பற்றி
புத்தகத்தில் படிப்பதோடு சரி...

Labels:

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Thiru

Good one. I remember having read this somewhere though...

 

Post a Comment

<< முகப்பு