சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

50 பைசா ஆசைகள்














வெறுமனே சாதாரணமான பத்து ரூபா சம்பந்தப்பட்ட ஒரு விருப்பமாயிருக்கும். ஆனால் அது நிறைவேற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது எனக்கு.
படிக்கிற வயசில் ஒரு ஆசை. Five Star சாக்லேட் முழுசா ஒன்னு வாங்கி அப்படியே சாப்பிடனும்னு. அப்பப்ப காசு கிடைக்கும். ஆனாலும் தூரத்துப் பச்சையாய் என்னை மயக்கிய Five Star அருகில் என்னை இழுத்து என்னை அணைத்துக்கொள்ளவே இல்லை. நானும் நெருங்கவேயில்லை.
சம்பாதிக்கிற காலத்திலும் நூறு, இருநூறு செலவு செய்து பீர் எல்லாம் அடிக்கிறது உண்டு. ஆனாலும் Five Star சாப்பிட்டதில்லை. கடையில் அதைப் பார்க்கும் போதெல்லாம் மனசு ஏங்கும்.
"எப்படியாவது ஒரு நாளைக்கு இந்த சாக்லேட்டை வாங்கி..."
"விலை அதிகமா இருக்குமோ?"
"எங்க வச்சி சாப்பிடுறது?"
ஏகப்பட்ட கேள்விகளுக்கு நடுவில் புதைந்து கிடந்த ஆசை அது. நான் மெடிக்கல் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் நிறைவேறியது அது.
அங்கேயே இருந்தது Five Star. ஆறு ரூபாய் கொடுத்து வாங்கி வீட்டுக்குப் போறப்ப சைக்கிளை மிதிச்சிக்கிட்டே ஒத்தக் கையாலே அந்த சாக்லேட்டை பிரிச்சி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கிட்டு....

ஒரு ஆறு ரூபாய் சாக்லேட் சாப்பிட எனக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டன. இப்போதும் கடைகளுக்குச் செல்லும் போதும் 50 பைசா ஆசைகள் வருவதுண்டு. ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் நிறைவேற விடமாட்டேன்.

இப்படித்தான் ஒரு ஆசை, "ஆனந்த விகடன்" காரர்கள் வந்து தீர்த்து வைக்காமல் நானாகவே நிறைவேற்றிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. (அந்த சமயத்தில், ஆனந்த விகடனில், சிலரை சந்தித்து, அவர்கள் ஆசைகளை நிறைவேற்றும் பகுதி ஒன்று இடம் பெற்றுக் கொண்டிருந்தது)

வளர்ந்து வந்த காலத்தில் "Dove" சோப்பு மீது தீராத மயக்கம் உண்டு. நல்ல சோப்புன்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு விலை விசாரிச்சா, 40 ரூபாய். அடியாத்தீன்னு ஓடி வந்திட்டேன். "என்னிக்காவது ஒரு நாள் உன்னைப் போட்டு குளிக்காம விடமாட்டேன்" என்று ஒரு கனல் மட்டும் இருந்திச்சு. சென்னை வாழ்க்கையில் Dove அனுபவிக்க பல சந்தர்ப்பம் அமைந்தும் கை கூட வில்லை. போன வாரம்தான் நிறைவேறியது. 100 கிராம் எடையுள்ள, வாசனை அள்ளிக்கொண்டு போகும், பால் போலே, அநியாயத்துக்கு கரையும், Dove சோப்பு 43.50 கொடுத்து வாங்கி ஆசைதீர குளித்தேன்....

(சரியான அல்பத் தனமான கட்டுரையா இருக்கே...)

Labels: ,

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு