நட்புக்குதிரை

நட்புக்குதிரை
வாழ்க்கை களத்தில்
கட்டவிழ்க்கப்படும் குதிரைகள்
பாய்கின்ற பாதையில்
பள்ளங்களும் மேடுகளும்
சகஜம் இங்கே.
இருப்பினும்
குளம்புகளில் சிதறும்
மலைகளும் குன்றுகளும்.
லகான் இல்லையெனினும்
குறி வெற்றி நோக்கியே.
முன்னேறுவதற்குள்
மூச்சு முட்டி, வேகம் களைத்து
கண் மூடி நுரைதள்ளி
இற்றுவிடும் போதெல்லாம்
ஆறுதலாய் பிடரி தடவும்
நட்பாய்
அருகில் ஒரு குதிரை.
கட்டவிழ்க்கப்படும் குதிரைகள்
பாய்கின்ற பாதையில்
பள்ளங்களும் மேடுகளும்
சகஜம் இங்கே.
இருப்பினும்
குளம்புகளில் சிதறும்
மலைகளும் குன்றுகளும்.
லகான் இல்லையெனினும்
குறி வெற்றி நோக்கியே.
முன்னேறுவதற்குள்
மூச்சு முட்டி, வேகம் களைத்து
கண் மூடி நுரைதள்ளி
இற்றுவிடும் போதெல்லாம்
ஆறுதலாய் பிடரி தடவும்
நட்பாய்
அருகில் ஒரு குதிரை.



0மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு