சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

மீண்டும் மீண்டும் நீ



மீண்டும் மீண்டும் நீ

தவிர்க்கப் பார்த்தாலும்
எனக்குள்
தணல் மூட்டிப் போகிறது
என்னைக் கடந்து போகும்
உன் தரிசனங்கள்.

மௌனமாய் கண்மூடி
உனை மறக்க முயல்கையில்
பிடிவாதமாய் வந்து மோதும்
எனக்கான
உன் காற்று.

இறந்த கால நிகழ்வுகளின்
நிகழ்கால சாட்சியங்களாய்
என்னைக் கொல்கிறது
உனக்கான
என் கவிதைகள்

என்ன செய்ய?
எல்லாம் முடிந்து விட்டது
என்றாலும்
சிலவற்றை
புதைக்கத்தான் முடிகிறது
எரிக்க முடிவதில்லை.

Labels: ,

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு